பென்னாகரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்டு, மூன்று வயது சிறுவன் பலி - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 அக்டோபர், 2024

பென்னாகரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்டு, மூன்று வயது சிறுவன் பலி


பாலக்கோடு இளங்காலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு அகிலேஷ் (3) என்ற மகனும், ஒரு மாத பெண் கை குழந்தையும் உள்ளது.


இந்நிலையில் சதீஷ்குமாரின் மனைவி ஐஸ்வர்யா தனது தாய் வீடான பென்னாகரம் அருகே உள்ள எட்டிக்குழி கிராமத்தில் வசித்து வந்தார். அந்த பகுதி குடிநீர் தேவைக்காக, அரசு சார்பில் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான மோட்டார் பழுதாகி நீண்ட நாட்களாக ஆகிறது. அந்த மோட்டார் சரி செய்வதற்காக கழட்டி சென்றுள்ளனர். ஆனால் அதற்கான மின்சார வயர்களை ஆங்காங்கே ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்துள்ளது, இதனை அறியாத சிறுவர்கள் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.


இந்நிலையில் இன்று மாலை சதீஷ்குமாரின் மகன் அகிலேஷ் தொங்கிக் கொண்டிருந்த மின் வயரை தீண்டியதால், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர், இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad