தர்மபுரி மாவட்டம். பஞ்சப்பள்ளி அடுத்த நாகனூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் கல்குவாரி குத்தகை காலம் முடிந்ததால் கடந்த 3 வருடத்திற்கு முன்பு இந்த கிரானைட் குவாரி இயங்க தடை விதித்து மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த குவாரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் உள்ளது. இந்த கிரானைட் குவாரியில் இரவு நேரங்களில் சிலர் லாரிகளில் கிரானைட் கற்களை கடத்தி வந்தனர்.
23ம் தேதி நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் குவாரியில் இருந்து கிரானைட் கற்களை கடத்துவதை அறிந்த அப்பகுதியினர் நேற்று விடியற்காலை குவாரியில் இருந்து வெளியே வந்த 2 லாரி மற்றும் மண் அள்ளும் எந்திரத்தை தடுத்து நிறுத்தி பாலக்கோடு தாசில்தார் ரஜினி மற்றும் பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தாசில்தார் ரஜினி, துணை தாசில்தார் ஜெகதீசன் ஆகியோர் 2 லாரி மற்றும் ஜே.சி.பி.எந்திரத்தை பறிமுதல் செய்து பஞ்சப்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக