தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைப்பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள் அறிவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைப்பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் துவங்கிடவும், ஏற்கனவே தொழில் நிறுவனங்கள் நடத்தி கொண்டிருப்பவர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளித்து பயிற்சியினை நிறைவு செய்த பின்னர் தனிநபர் ஒருவருக்கு ஒரு கோடி வரை கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடன் தொகையில் ரூபாய் 30 இலட்சம் வரை மூலதனப் பொருள் வாங்கவும், இதற்கு 3 விழுக்காடு வட்டிமானியமும் வழங்கப்படும், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்திற்குண்டான படிவம் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது, எனவே தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த ஏற்கனவே தொழில் செய்து வரும் மற்றும் புதியதாக தொழில் துவங்க விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைப்பணியின் போது உயிரிழந்த கைம்பெண்கள் அனைவரும் இப்படிவத்தினை நேரில் அணுகி பூர்த்தி செய்து தருமாறும், நேரில் வர இயலாதவர்கள் இவ்வலுவலக தொலைபேசி எண்: 04342- 297844 மூலம் தொடர்பு கொண்டு தங்களது பெயரினை பதிவு செய்து இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக