இக்கூட்டத்திற்க்கு நாடாளுமன்ற உறுப்பினர் வக்கில் .ஆ.மணி, மாநில தீர்மானக் குழு உறுப்பினர் கீரை.விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் முருகன், மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு பேசும் போது வரும் நவம்பர் 27ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகு விமர்சையாக மாவட்டம் முழுவதும் கொண்டாட வேண்டும், வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும், கழக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் கலைஞர் உருவ சிலைகள் மற்றும் நூலகம் அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வக்கில் கோபால், இலா.கிருஷ்ணன், அடிலம் அன்பழகன், முனியப்பன், பஞ்சப்பள்ளி அன்பழகன், சந்திரமோகன், வேடம்மாள், செங்கண்ணன், சரவணன், முத்துக்குமார், பேரூர் கழக செயலாளர்கள் சீனிவாசன், பி.கே.முரளி, வெங்கடேசன், மோகன், விவசாய அணி நிர்வாகி ஏ.வி.குமார், மீனவர் அணி நிர்வாகிகள் முருகன், குமரன், ஜெயந்திமோகன், நெசவாளர் அணி நிர்வாகி ராஜபாட், ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்ஜெயா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவகுரு, துணை அமைப்பாளர் மகேஷ்குமார், ஹரிபிரசாத், இதாயத்துல்லா மற்றும் அனைத்து கிளை கழக, நகர, ஒன்றிய , மாவட்ட, மாநில மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக