தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 அக்டோபர், 2024

தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.


வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தொடர் மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது, இதனை தொடர்ந்து அரூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார், அதில், தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து மிக அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலும்,  கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட இருப்பதாலும்,  தென்பெண்ணை ஆற்றின் இரு கரையோரம் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.    


இந்த இரு கரைகளை ஒட்டி இருக்கின்ற கிராமங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உரிய முன்னெச்சரிக்கை செய்திகளை பொது மக்களுக்கு அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என அரூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.வில்சன் இராஜசேகர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad