நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் துணை முதல்வர் ரவி அவர்கள் முன்னிலையில், கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி.செல்வராணி அவர்கள் தலைமையில், உதவி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் முன்னிலையில் கல்லூரி மாணவ,மாணவி யர்கள் 400க்கும் மேற்பட்டோர் பார்வையில் நடைபெற்றது.
நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் முன்னிறுத்தி அதில் உள்ள எல்.இ.டி. தொடு திரை வழியாக உணவு பாதுகாப்பு குறித்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்தும், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் குறித்தும் காணொளி காட்சி வழியாக திரையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், உணவுப் பொருட்களைக் கொண்டு குறிப்பாக தேயிலை, தேன், நெய், வெல்லம், பச்சை பட்டாணி, உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் கலப்படம் கண்டறிதல் குறித்தும், அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடுஅறிதலுடன் அயோடின் நுண்ணூட்டச் சத்து அவசியம் குறித்தும், பொட்டலம் இடப்பட்ட பாக்கெட் உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்களான உணவு பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண், உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், அலர்ஜி தன்மை, சைவ அசைவ குறியீடு, நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்டவை காணுதல் குறித்தும் நேரடியாக உணவுப் பொருட்களைக் கொண்டு செயல் விளக்கம் செய்தனர். கல்லூரி நாட்டு நலப் பணிகள் திட்ட பொறுப்பாசிரியர் திரு.முருகன் நன்றி உரையாற்றினார்.
இன்றைய தினம் பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மளிகை, உணவகம், டீக்கடைகளில் இருபதுக்கும் மேற்பட்ட தேயிலை தூள்,பருப்பு வகைகள், பயன்படுத்தும் சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், இனிப்பு உள்ளிட்ட உணவு மாதிரிகள் சேர்க்கப்பட்டு, வாகனத்தில் பரிசோதித்து பரிசோதனை முடிவில் உடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விழிப்புணர்வு தொடர்ச்சியாக மாவட்டம் முழுதும் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக