தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைப்பெற்ற தொழிலாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமினை செயலாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, நுரையீரல் பரிசோதனை, சளி பரிசோதனை, கொலஸ்ட்ரால் அளவு, சிறுநீரகம் உள்ளிட்ட பரிசோதனைகளை ஆலை மருத்துவர், கீதாராணி, அரசுமருத்துவர் பூமத்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மேற்கொண்டு, குறைபாடு உடையவர்களை கண்டறிந்து மருந்து, மாத்திரைகள் வழங்கியதுடன், உயர் சிகிச்சை தேவைபடுபவர்களுக்கு உரிய பரிந்துரை மேற்கொள்ளப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
இம்முகாமில் தொழிலாளர் நல அலுவலர் மகேந்திரன், அலுவலக மேலாளர் ரவீந்திரன், தலைமை அலுவலர்கள் ஊழியர்கள், தொழிலாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக