விடுதிகள், மறுவாழ்வு மையங்கள் பதிவு செய்வதற்கான முழுவிவரம் வெளியீடு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 அக்டோபர், 2024

விடுதிகள், மறுவாழ்வு மையங்கள் பதிவு செய்வதற்கான முழுவிவரம் வெளியீடு.


மாவட்ட
முழுவதும் குழந்தை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிக்களுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம்பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பின்வரும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்.

. எண்.

விடுதிகள் () இல்லங்களின் வகைப்பாடு

சம்மந்தப்பட்ட துறை

பதிவு மற்றும் உரிம்ம் பெறவதற்கான சட்டப் பிரிவு

1.

குழந்தைகள் இல்லங்கள்

குழந்தைகள் நலன் () சிறப்புச் சேவைகள்

இளைஞர் நீதி

(பாராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம்-2015)

2.

முதியோர் இல்லங்கள்

சமூக நலத்துறை

மூத்த குடிமக்களுக்கான சட்டம்-2007

3.

மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016

4.

மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016

5.

போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள்

தமிழ் நாடு மாநில மனநல ஆணையம் (State Mental Health Authority)

மனநல பாதுகாப்புச் சட்டம்-2017

6.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள்

சமூக நலத்துறை

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காள விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான ஒழுங்குமுறை சட்டம்-2014

7.

மனநலம்பாதிக்கப்பட்டோருக்கா இல்லங்கள்

தமிழ் நாடு மாநில மனநல ஆணையம் (State Mental Health Authority)

மனநல பாதுகாப்புச் சட்டம்-2017

அவ்வாறு பதிவு பெறாமல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர்கள், மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லாமல் மற்றும் விடுதிகள் ஆகியவை உரிய முறையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் / அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. 

. எண்.

விடுதிகள் () இல்லங்களின் வகைப்பாடு

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்--அலுவலகம்

1.

குழந்தைகள் இல்லங்கள்

htts://dsdcpimms.tn.gov.in

2.

முதியோர் இல்லங்கள்

www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in

3.

மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,தருமபுரி

4.

மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,தருமபுரி

5.

போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள்

htts://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php

அல்லது

முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

6.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள்

htts://tnswp.com

7.

மனநலம்பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள்

htts://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php

அல்லது

முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இதன்படி பதிவு செய்யப்பட்டாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக மேற்காணும் இணையதளம் / அலுவலகம் வாயிவாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவறுத்தப்படுகிறது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ..ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.                                                                                                                    

கருத்துகள் இல்லை:

Post Top Ad