தருமபுரியில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாள் விழா 02.10.2024 இன்று புதன்கிழமை கொண்டாப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 அக்டோபர், 2024

தருமபுரியில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாள் விழா 02.10.2024 இன்று புதன்கிழமை கொண்டாப்பட்டது.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் பாரம்பரிய சிலம்பம் இளைஞர் நற்பணி சங்கம், இராஜாபேட்டை இணைந்து ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி, தருமபுரியில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாள் விழா 02.10.2024 இன்று புதன்கிழமை கொண்டாப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரியின் முதல்வர் திரு. S. துரை தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரியின் இயக்குனர் திரு. S. சிலம்பரசன் அவர்கள் மகாத்மா காந்தியின் வாழ்கை வரலாறு பற்றிய விரிவான கருத்துரை வழங்கினார். அதியமான் TV யின் இயக்குனரும் முன்னாள் தேசிய இளைஞர் தொண்டருமான திரு. E. கபில்தேவ் இந்த நிகழ்ச்சி பற்றிய விளக்கவுரை வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அடுத்ததாக தூய்மை பாரத விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அடுத்ததாக மாணவ மாணவியர்களுக்கு பேச்சு, வினாடி வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் நேரு யுவ கேந்திராவின் சார்பில் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. 


பிறகு மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தூய்மை பாரத விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தருமபுரி ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரியின் ஆசிரியர்கள் திருமதி. கௌசல்யா, திருமதி. ஆனந்தி ராயர், திருமதி. செல்வி, திரு. தினேஷ், திருமதி. வித்யா, திருமதி. கிருஷ்டின் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர். 


மேலும் இந்த நிகழ்ச்சியில் கக்கன் இளைஞர் நற்பணி சங்கத்தின் செயலாளர். திரு. கமலக்கண்ணன், துணை செயலாளர் திரு. பரமசிவம், பாரம்பரிய சிலம்பம் இளைஞர் நற்பணி சங்கத்தின் செயலாளர் திரு. முருகன் அதியமான் TV யின் இயக்குனரும் முன்னாள் தேசிய இளைஞர் தொண்டருமான திரு. E. கபில்தேவ் இந்த நிகழ்ச்சி பற்றிய விளக்கவுரை வழங்கினார் . 


இறுதியாக நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர். திரு. பசுபதி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவின் பல்நோக்கு பணியாளர் திரு.ரா.முனியப்பன் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad