பாப்பாரப்பட்டி அருகே மழையூர் மலையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோபாலசாமி திரு திருக்கல்யாண வைபவத்தை வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

பாப்பாரப்பட்டி அருகே மழையூர் மலையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோபாலசாமி திரு திருக்கல்யாண வைபவத்தை வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மலையூரில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோபால் சுவாமி திரு கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத அனைத்து  சனிக்கிழமைகளிலும்  சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இந்த கோவிலை இருதரப்பைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் கோயில் வருவாயில் 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கணக்கு காட்ட வில்லை என ஒரு தரப்பை மற்றொரு தரப்பு குற்றம் சாட்டியது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கில் இரு தரப்பும் சமரசம் வராததால் நீதிமன்றம் வருவாய் துறை மற்றும் அறநிலை துறையை எடுத்து கோயில் திருவிழாவை நடத்த உத்தரவு பிறப்பித்தது. 

உத்தரவின் பேரில் போலீசார் குவிக்கப்பட்டு வருவாய் துறை மற்றும் அறநிலைத்துறை சேர்ந்து இன்று சிறப்பு வாய்ந்த சனிக்கிழமை என்பதால் கோபால் சுவாமி துளசியம்மாள், லட்சுமி அம்மாள் திருக்கல்யாண வைபவ திருவிழா நடந்தது. இந்த திருக்கல்யாணத்தில் இரு தரப்பும் சேர்ந்து நடத்த முயற்சித்தபோது காவல்துறையினர் இரு தரப்பையும் அப்புறப்படுத்திவிட்டு திருக்கல்யாணம் வைபவத்தை நடத்தினர்.


இதில், மூலவருக்கு அதிகாலை முதல் பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனையை தொடர்ந்து, மகா தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கோபால் சுவாமி மற்றும் துளசியம்மாள், லட்சுமிஅம்மாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அதனை தொடர்ந்து, சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


திருக்கல்யாண வைபவத்தையொட்டி  சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம்  வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad