கும்மனூர் ஊராட்சி வேடம்பட்டி கிராமத்தில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிடம் திறப்பு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

கும்மனூர் ஊராட்சி வேடம்பட்டி கிராமத்தில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிடம் திறப்பு விழா.


தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளிஅடுத்த கும்மனூர் ஊராட்சியில் உள்ள வேடம்பட்டி கிராமத்தில் மாநில நிதி குழு மானிய திட்டத்தின் கீழ்  7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிட திறப்பு விழா மாவட்ட கவுன்சிலர் கவிதாசரவணன் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வக்கில் செந்தில் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்  முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ  அவர்கள் கலந்து கொண்டு  ரிப்பன் வெட்டி, பல்நோக்கு மைய கட்டிடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு அதிமுக வடக்கு ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன், மாரண்டஅள்ளி நகர கழக செயலாளர் கோவிந்தன்,  எம்ஜிஆர் மன்ற செயலாளர் புதூர்சுப்பிரமணி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஜிம் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜா ,சுரேஷ், கும்மனூர் கிளை கழக  செயலாளர்கள், சண்முகம், ரவி, நிர்வாகிகள் மாதேஷ், வெங்கடேஷ், பாலு, சேகர், முத்துராஜ்,  மற்றும் கழகத் தொண்டர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். அணைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad