தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜிரோட்டில் உள்ள தனியார் கூட்டரங்கில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வட்ட பேரவை கூட்டம் தோழர் ரவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு முன்னாள் வட்ட செயலாளர் தோழர் காரல்மார்க்ஸ் வரவேற்று பேசினார்.
இக் கூட்டத்தில் வட்ட செயலாளராக தோழர் கோவிந்தசாமி,வட்ட தலைவராக தோழர் கோபி , வட்ட பொருளாளராக தோழர் மீரா, துணை செயலாளர்களாக தோழர் ரவி, தோழர் அருள் குமார், துணை தலைவர்களாக தோழர் தேவிஸ்ரீ, தோழர் சத்தியராஜ் மற்றும் 21 நபர்களை கொண்ட வட்டக்குழு தோழர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடைப்பெற்ற கூட்டத்தில் பாலக்கோடு பகுதியில் தக்காளி பதனிடும் தொழிற்சாலை மற்றும் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும், பாலகோட்டில் உள்ள அரசு மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்த வேண்டும், பாலகோட்டில் சிப்காட் அமைத்து, வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், பாலக்கோடு நகரில் உள்ள நூலகத்தை மைய நூலகமாக தரம் உயர்ந்திடுதல், கிராமங்கள் தோறும் புதிய நூலகத்தை துவங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் தோழர்கள் நாகராஜன், சேகர் பாண்டியம்மாள்,ஸ்டாலின், ஜோசப், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் அருள்குமார் நிறைவு உரை ஆற்றினார். கூட்ட முடிவில் தோழர் கோவிந்தசாமி நன்றி உரை ஆற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக