தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயமிக்க சமூக சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் மை தருமபுரி அமைப்பினர் செய்து வருகின்றனர். இரத்ததானம், உணவு சேவை, ஆதரவற்ற புனித உடல்கள் நல்லடக்கம் சேவை செய்து வருகின்றனர்.
இரத்ததானம் சேவையில் இதுவரை 11,000 யூனிட் அலகு மேல் வழங்கினார். 2023 ஆம் ஆண்டு தருமபுரி அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்ததான முகாம், நோயாளிகளுக்கு அவசர இரத்ததான உதவிகள் செய்தமைக்கு மை தருமபுரி அமைப்பை தருமபுரி ஆட்சியர் திருமதி.சாந்தி அவர்கள் பாராட்டி சான்றிதழ் கேடயம் வழங்கினார்.
உடன் அரசு தருமபுரி மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதா, மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் கன்யா ஆகியோர் உடனிருந்தனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, அருணாசலம், மருத்துவர் முஹம்மத் ஜாபர், கிருஷ்ணன் ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக