நேற்று இரவு ஆம கடத்தூர் MCS திருமண மண்டபத்தில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் செய்திகளை சேகரித்து கொண்டிருந்த பத்திரிக்கை நிருபர்களை அக்கட்சியின் நிர்வாகி மடதஹள்ளியை கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் தருமன்(27), கடத்தூர் அதிமுக நகர செயலாளர் செல்வராஜ் மகன் சந்தோஷ்(29), முன்னாள் கடத்தூர் அதிமுக நகர செயலாளர் பெருமாள் மகன் சசிகுமார்(49), அய்யம்பட்டி கிராமத்தைச் சார்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள்ளே சண்டை போட்டதாகவும் அதனை வீடியோ மற்றும் போட்டோ பதிவு செய்யும்போது தருமன் மற்றும் அவரது நண்பர் இருவரும் சீனிவாசன் வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் மற்றும் தினகரன் நிருபர் உதயகுமார் என்பவரின் செல்போனை பறித்து அனைத்து பதிவுகளையும் நீக்கி செல்போனை பறித்து கொண்டதாகவும் அதனை கேட்டதற்கு தருமன், |நான் அஇஅதிமுகவை சார்ந்தவன். அப்படிதான் செய்வேன் நீ என்னை ஒன்றும்செய்ய முடியாது" என்று ஆபாச வார்த்தைகளால் திட்டி சட்டையை பிடித்து பத்திரிக்கை நிபுணர்கள் நீங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று இரு பத்திரிக்கை நிருபர்களை தாக்கியுள்ளனர்.
இவர்கள் மீது கடத்தூர் C-3 காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய அஇஅதிமுக குண்டர்களை கைது செய்து சிறைப்படுத்தி கடுமையான தண்டனைகளை வழங்கிட வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்துமா..?!
- செ நந்தகுமார் செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக