தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் தீவீர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலக்கோடு அடுத்த தாமரை ஏரி பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரித்ததில் பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த சந்துரு (வயது.19) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது, மேலும் பிளாஸ்டிக் கவரில் மறைந்து வைத்திருந்த 50 கிராம் கஞ்சா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக