பாளையம் ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டருக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 அக்டோபர், 2024

பாளையம் ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டருக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தர்மபுரி மாவட்டத்தில்  அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்,  தனியார் சமூக நல அமைப்புகள் உட்பட 32 அமைப்புகளுக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தார். இதில்   அரூர் வட்டம் பாளையம் ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டருக்கான  பாராட்டு சான்றிதழ் கேடயத்தை  பயிற்சி  மைய நிறுவனர் அ.சி.தென்னரசு அழகேசன் மாணவர் வீரமணி ஆகியோர்  பெற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்சியில்  தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் அமுதவல்லி, ரத்தவங்கி மருத்துவஅலுவலர் மருத்துவர்.கன்னியா  இரத்த வங்கி ஊழியர் பிரபு மற்றும் பல்வேறு கல்வி நிலைய ஆசிரியர்கள் , பேராசிரியர்கள், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த  தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad