மாரண்டஅள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தை பறித்து கொண்டதாக பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 அக்டோபர், 2024

மாரண்டஅள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தை பறித்து கொண்டதாக பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே பிக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த செந்தாமரை (வயது.33) இவரது கனவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார், இவருக்கு ஒரு மகள் உள்ளார்.


இவரது மாமனாரும் இறந்து விட்ட நிலையில் இவருக்கு மாமானார் சொத்தில்  13 சென்ட் நிலம் பாகமாக கிடைத்தது, கூலி வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்த செந்தாமரைக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, இவருக்கு பாகமாக கிடைத்த 13 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர்  முறைகேடாக 2016ம் ஆண்டு  கிரயம் செய்துள்ளார். இதையறிந்த செந்தாமரை நில மோசடி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


மேலும் மாவட்டபதிவாளர், மாரண்டஅள்ளி சார்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு அறிவிப்பு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது, இந்நிலையில் சுப்ரமணி தான் கிரையம் பெற்ற செந்தாமாரையின் நிலத்தை தனது அண்ணனான  சந்திரேசேகருக்கு 2021ல் விற்பனை செய்துள்ளார். சந்திரசேகர் அந்த நிலத்தை நேற்று வேறு நபருக்கு விற்பனை  செய்தார்.


இதையறிந்த செந்தாமரை மாரண்டஅள்ளி சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்று நிலம் சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, சார்பதிவாளரான உங்களுக்கு நீதிமன்ற நோட்டிஸ், தடங்கல் மனு, நிலத்தின் பத்திரம் உள்ளிட்டவை வழங்கியும், மீண்டும், மீண்டும் என் நிலத்தை வேறு வேறு நபர்களின் பெயரில் ஏன் கிரயம் செய்கிறீர்கள் என கேட்டார். இதற்கு உரிய பதில் அளிக்காததால் சார்பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.


இதுகுறித்து சார் பதிவாளர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த மாரண்டஅள்ளி போலீசார் பணியில் உள்ள அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறி  அப்பெண்ணை அங்கிருந்து வெளியேற்றினர்.


குழந்தைகளுடன் சாவதை தவிர வேறு வழியில்லை கண்ணீர் மல்க கனவனை இழந்த பெண் கதறலுடன் சார் பதிவாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் திடிர் பரபரப்பை ஏற்பத்தியது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad