ஐடிஐ மாணவர்கள் சேர்க்கை 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கான இறுதி வாய்ப்பு 18.10.2024. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 அக்டோபர், 2024

ஐடிஐ மாணவர்கள் சேர்க்கை 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கான இறுதி வாய்ப்பு 18.10.2024.


அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024-ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான இறுதி வாய்ப்பு 18.10.2024 ஆகும். முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் அனைவரும் அரூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை (Spot Admission) நடைப்பெற்றுக் கொண்டிருப்பதால் அனைத்து மாணவர்களும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசால் வழங்கப்படும் இலவச சலுகைகள் :

பயிற்சிக் காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு கீழ்க்கண்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.

  1. அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவி தொகை வழங்கப்படுகிறது.
  2. மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகை (Stipend)
  3. விலையில்லா பாடப்புத்தகம் (Books)
  4. விலையில்லா வரைபட கருவிகள் (Drawing Instrument)
  5. விலையில்லா மடிகணினி (Laptop)
  6. விலையில்லா சீருடை (Uniform)
  7. விலையில்லா மிதிவண்டி (Bi-cycle)
  8. விலையில்லா பேருந்து பயண அட்டை (Bus Pass)
  9. விலையில்லா மூடுகாலனி (Shoe)


ஓராண்டு மற்றும் ஈராண்டு பயிற்சியில் சேருவதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 40 ஆகும். எனவே தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும் அரூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கையில் சேர்ந்து பயனடையலாம்.


பதிவேற்றம் செய்யும் போது தேவைப்படும் ஆவணங்கள்.

  1. Original 10 th marksheet, 
  2. Transfer Certificate, 
  3. Original community certificate,
  4. ஆதார்அட்டை அலைபேசி எண்கள், 
  5. மார்பளவு புகைப்படம்-1, 
  6. E mail ID.
  7. விண்ணப்ப கட்டணம் ரூ. 50/- மற்றும் சேர்க்கை கட்டணம் - Registration Fees-ரூ.25/-, Sports Fees – ரூ.20/- (or) ரூ.10/-, Certificate Verification Fees- ரூ.50/-, Caution Deposit- ரூ.100/- மட்டும். 

மேலும் விபரங்களுக்கு -9600359646, 8825438742, 9751725714. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad