உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 அக்டோபர், 2024

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தகவல்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத் தேடி, உங்கள் ஊரில்; திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும், அரசின் பல்வேறு திட்டங்கள் / திட்டங்கள் / பணிகளை விரைவுபடுத்துவதற்கான திட்டமாகும்.


இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொதுமக்களை அவர்களின் வீட்டு வாசலில் அணுகும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.


இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 அக்டோபர் மாதத்திற்கான உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் தருமபுரி வட்டத்தில் இன்று (16.10.2024) காலை 09.00 மணி முதல் நாளை (17.10.2024) காலை 09.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இத்திட்ட முகாமில் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், ஹேமலதா நினைவு அறக்கட்டளை முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பாரதிபுரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு உள்ளிட்டவற்றையும், தருமபுரி நகரப்பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.


இதனைத்தொடர்ந்து தருமபுரி வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கிருஷ்ணாபுரம் கால்நடை மருத்துவமனையினையினையும், கிருஷ்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து, அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள வீட்டுமனை பட்டா வழங்கும் பணிகள் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.


பின்னர், தருமபுரி வட்டம், அரியகுளம் இந்திரா நகர் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏதுவாக மேற்கொள்ளப்படும் திட்டபணிகள் குறித்தும், வீடு புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி வட்டம், அரியகுளம் பகுதியில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


மேலும், அரியகுளத்தில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கடன் வழங்கப்பட்டு ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டுவரும் நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்தும், இந்த தொழில் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, கிருஷ்ணாபுரம், மோட்டுபட்டியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் குளம் அமைக்கும் பணியினையினையும், காரிமங்கலம் வட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டில் நீர் நிரம்பி உள்ளதையும், ஈச்சம்பாடி, அக்ரஹாரம் ஏரியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.


மேலும், பொதுமக்களுக்கு பயன்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் கட்டிமுடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டு, சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்து கருத்துக்களை பெற்றார். ஆய்வினை தொடர்ந்து, தருமபுரி நகராட்சி, சந்தைப்பேட்டை அறிவுசார் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 


இந்த மதிப்பாய்வின் போது, வருகைதந்த அலுவலர்கள் களத்தின் சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்தார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் பதிவு முகாமை பார்வையிட்டு, நேரிடையாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான பயனாளிகளுக்கு சென்று அடைவதை உறுதி செய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


வடகிழக்கு பருவமழையையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, உரிய அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, கலந்தாலோசனைக்கூட்டம் மற்றும் மாலையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய அறிவுரை வழங்கவுள்ளார்கள். 


இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. சாந்தி, துணை இயக்குநர் (மருத்துவம்) மரு.ஜெயந்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் திருமதி.தேன்மொழி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.சிவக்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.அ.லலிதா, மாவட்ட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திருமதி.சுமதி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) மரு.இளவரசன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் திரு.பிரசன்னா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.குணசேகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டாட்சியர்கள் திரு.சண்முகசுந்தரம், திரு.கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.சத்யா, திரு.வடிவேலன், திரு.மணிவண்ணன் மற்றும் மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad