விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 141-வது பிறந்த நாள் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 அக்டோபர், 2024

விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 141-வது பிறந்த நாள் விழா.


விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவ படத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி, ஒண்ணப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 141-வது பிறந்த நாள் விழா இன்று (04.10.2024) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்து அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி ஆகியோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


இதனை தொடர்ந்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


பின்னர் அருகில் இருந்த விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவிடத்தில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு, தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்திலுள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவிடம், நினைவுத்தூண் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.மோகன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கவிதா ராமகிருஷ்ணன், பென்னாகரம் வட்டாட்சியர் திருமதி.லட்சுமி, பாப்பாரப்பட்டி பேரூராட்சித்தலைவர் திருமதி.பிருந்தா, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி.மா.பூங்கொடி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சுருளிநாதன், பாப்பாரப்பட்டி செயல்அலுவலர் திருமதி.கோமதி, ஒண்ணப்பகவுண்டன அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சே.தமிழ்செல்வி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad