பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு அன்புமணிராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பாமக சார்பில் இலவச மருத்துவ முகாம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 அக்டோபர், 2024

பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு அன்புமணிராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பாமக சார்பில் இலவச மருத்துவ முகாம்


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு பாமக தலைவர் மருத்துவர்  அன்புமணி ராமதாஸ் அவர்களின் 56வது   பிறந்த நாளை முன்னிட்டு  பாலக்கோடு கிழக்கு  ஒன்றிய  பாமக சார்பில் இலவச மருத்துவ முகாம் பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு அன்புமணிராமதாஸ்  பிறந்த நாளை முன்னிட்டு பாமக சார்பில் இலவச மருத்துவ முகாம் செயலாளர் சுகர்மில் துரை தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பாமக மாநில துணைத் தலைவர் பாடி செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இம்முகாமினை துவக்கி வைத்தார்.

இம்முகாமில் கே.ஜி.எம். மருத்துவர் பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் எண்டப்பட்டி, பொரத்தூர், கோடியூர், மாதம்பட்டி, திம்மம்பட்டி, மாக்கன் கொட்டாய்,  உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த  பொதுமக்களுக்கு இரத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பொது உடல் நல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு  மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.


இம்முகாமில் மாவட்ட அமைப்பு தலைவர்  கிருஷ்ணன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, முன்னாள் நகர தலைவர் ராஜவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்  சேகர், வேடி, மாவட்ட பொருளாளர் சரவனகுமாரி, மாவட்ட துணைத்தலைவர் ராஜா, கவுன்சிலர் நவீன், கிளை செயலாளர் மகேந்திரன், பாமக நிர்வாகிகள், சிலம்பு , அன்பழகன், உள்ளிட்ட கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad