பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட குள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு திறன்மிகு வகுப்பறைகளையும் பார்வையிட்டார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாலை முதலே தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக திடீர் வருகை புரிந்திருந்தார் இந்த நிலையில் இன்று பென்னாகரம் அடுத்துள்ள குள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது முதலமைச்சர் காலை உணவு தயாராவதில் தாமதம் என்பதை அறிந்து அதுகுறித்து தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தார். மின்சார நீர் மோட்டாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் கசிந்துள்ளது.
இதனை அறிந்த ஆசிரியர்களும், பணியாளர்களும் காலையில் அதனை பழுதுபார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பழுதுப் பார்த்துக்கொண்டிருந்த பணியாளர்களிடம் ‘இனிமேல் இதுபோன்ற மின் கசிவு ஏற்படாத வகையில் சீரமைக்குமாறு’ கேட்டுக்கொண்டார். தொடர்ந்து முதலமைச்சர் காலை உணவு திட்டப் பணியாளர்களுடன் உரையாடி, உணவின் தரத்தையும் ஆய்வு செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக