தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு,அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திடிர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் இறை வணக்கம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது, இறை வணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, வினாடிவினா, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கி பேசும் போது ஒவ்வொரு மாணவியும், சக மாணவிகளுக்கு பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க சொல்லி தர வேண்டும், கல்வியுடன், ஒழுக்கம், பணிவு, நேரம் தவறாமையை கடைபிடித்து வாழ்வின் உன்னத நிலைய அடைய வேண்டும் என கூறியவர்.
கடந்த கல்வி ஆண்டில் +2 தேர்வில் இப்பள்ளி முதலிடம் பெற்றமைக்கு தலைமை ஆசிரியர் புனிதா மற்றும் உதவி ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். அதனை தொடர்ந்தது பள்ளியின் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர், பணிகளை விரைந்து முடித்து மாணவிகளின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர அறிவுறுத்தினார். மேலும் 10ம் மற்றும் 12 ம் வகுப்பறைகளுக்கு சென்று மாணவிகளின் கல்வி நிலை குறித்து கேட்டறிந்தார்.
அதுசமயம் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, திமுக நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபாட், துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குமார், மாவட்ட பிரதிநிதி அமீர்ஜான், ஒன்றிய பிரதிநிதி அன்வர், நிர்வாகிகள் பெரியசாமி, சரவணன், கணேசன் ஆகியோர் உடனிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக