செம்மநத்தம் கிராமத்தில் மொபட் மீது சரக்கு லாரி மோதியதில் பெண் படுகாயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 அக்டோபர், 2024

செம்மநத்தம் கிராமத்தில் மொபட் மீது சரக்கு லாரி மோதியதில் பெண் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பேளாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த காந்திமதி (வயது.32) இவர் பாலக்கோடு பஸ் நிலையம் அருகில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி இரவு வேலை முடிந்து தனது மொபட்டில் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தார்.


செம்மநத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு லாரி மொபட் மீது மோதியதில் காந்திமதி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து அவரது கனவர் தியாகராஜி கொடுத்த புகாரின் பேரில்  பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad