இரயில்வே பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 அக்டோபர், 2024

இரயில்வே பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி - தொப்பூர் சாலையில்  பொம்மிடி ரயில் பாதையின் கீழ் உள்ள சுரங்க பாலத்தில் மழை காலங்களில்  மழை நீர் வெளியேற சரியான திட்டங்கள் வகுக்கப்பட வில்லை, சிறிய அளவிலான மழை பெய்தாலே பாலத்திற்குள் அதிகப்படியான தண்ணீர் தேங்கி நிற்கிறது, பேருந்துகள், சரக்கு வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என அனைத்திற்கும் இந்த ஒரே சாலை மட்டும் தான் உள்ளது. 

எனவே வாகன ஒட்டிகள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள்,  முதியவர்கள், மாற்று திறனாளிகள்  பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர், உள்ளே செல்லும் பொழுது தண்ணீரினால் இரண்டு சக்கர வாகனங்கள் இயங்காமல் பழுதாகி நின்று விடுகின்றது, வாகனத்தோடு விழ நேரிடுகின்றது, தேங்கி நிற்கும் மழைநீரில் கழிவுநீரும் கலந்துள்ளதால் பெரும் சுகாதார சீர்கேடும் உண்டாகின்றது, இதற்கு நிரந்தர தீர்வாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்குமாறு அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கிறார்கள், தற்போது உடனடியாக தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்  பொதுமக்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad