தீபாவளியை முன்னிட்டு ஏழ்மை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய மை தருமபுரி அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 அக்டோபர், 2024

தீபாவளியை முன்னிட்டு ஏழ்மை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பூதனஅள்ளி கிராமத்தில் ஏழ்மையில் உள்ள 20 குடும்பங்களுக்கு மை தருமபுரி அமைப்பின் சார்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு மளிகை பொருட்கள், இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மை தருமபுரி கௌரவ தலைவர் CKM இரமேஷ், சமூக சேவகர் ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர். 


பூதனஅள்ளி கிராம நிர்வாகிகள் விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி, ரகு, பள்ளி தலைமையாசிரியர் முருகன், ஊர் கவுண்டர் பொன்ராஜ்,பெரியசாமி, சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் முஹம்மத் ஜாபர், அருள்மணி, கிருஷ்ணன், செந்தில் ஆகியோர் மக்களுக்கான உதவி பொருட்களை ஒருங்கிணைத்து வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad