தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினர் இவரது உடலை மீட்டு விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை என தெரியவந்தது, இவரது உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து இன்று மை தருமபுரி தன்னார்வலர்கள் சார்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் பாலக்கோடு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜேந்திரன், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மருத்துவர் முஹம்மத் ஜாபர், ஜெய் சூர்யா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 113 புனித உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக