ஓசூர் சிப்காட் பகுதியில் தனிமையில் தங்கியிருந்து பணி செய்து வந்துள்ளார் 63 வயது முதியவர் ஜெகதீசன், இவரது சொந்த ஊர் சென்னை. கடந்த வாரம் ஓசூரில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்த காவல்துறையினர், அவரது சகோதரர் செல்வராஜ் அவர்களுக்கு தகவல் தந்தனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இவரது உடலை சென்னை கொண்டு செல்ல வசதி இல்லாத காரணத்தால் மை தருமபுரி அமைப்பின் மூலம் தருமபுரி நகராட்சி பச்சையம்மன் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதில் ஓசூர் காவல் ஆய்வாளர் கணிகைசாமி, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 112 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக