மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 அக்டோபர், 2024

மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.


மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந் நாள் தேசிய ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் நாள் அரசு விடுமுறை தினம் என்பதால், இன்றைய தினம் (30.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையேற்று, தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியான ”இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார் உறுதியளிக்கிறேன். 


சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.” என்ற உறுதிமொழியினை வாசிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரு.சேகர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad