தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கட்டப்பட்டுள்ள சுமார் 5 கோடி மதிப்பிலான பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர்.
மேலும் பென்னாகரம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட சுமார் 6 கோடி மதிப்பிளான, பல்வேறு பணிகளையும் தொடங்கி வைத்தனர். சுமார் 6 கோடி மதிப்பிளான, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் மேற்கொண்டனர். மேலும் சுமார் 5 கோடி மதிப்பிளான, பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வீட்டு மனை பட்டா குடும்ப அட்டை பயிர் மறைந்த செழிப்பான் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளும், திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட, திமுக நிர்வாகிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக