அரூர் அருகே உள்ள முல்லை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் முல்லை நர்சிங் கல்லூரி சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 அக்டோபர், 2024

அரூர் அருகே உள்ள முல்லை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் முல்லை நர்சிங் கல்லூரி சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டி காந்திநகரில் செயல்படும் முல்லை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் முல்லை நர்சிங் கல்லூரி சார்பில் ஒன்பதாம்ஆண்டு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு முல்லை கல்வி அறக்கட்டளை தலைவர் பி.ராஜீ தலைமை வகித்தார் முல்லை கல்வி நிறுவனங்களில் செயலாளர் எம்.வினோநாத் வரவேற்புரை ஆற்றினார் முல்லை கல்வி அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.சரவணன் பொருளாளர் என்.பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக பத்திரிகையாளர் ஆர்.ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே  சிறப்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் முல்லை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கே.உத்தேஷ், நர்சிங் கல்லூரி முதல்வர் எஸ்.ஹேமலதா ஆகியோர்  ஆண்டறிக்கை வாசித்தனர்.


இறுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின்  பரதநாட்டியம் தமிழ்நாடகம்  மௌன மொழி நாடகம் கராத்தே சிலம்பம் யோகா  நடைபெற்றது. இந்தியளவில் மற்றும் மாநில அளவில் யோகா, சிலம்பம், கராத்தே போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் சந்திரசேகர் காரப்பட்டு யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவனர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad