தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ஜெர்தலாவ், பி.செட்டி அள்ளி, பேளாரஅள்ளி, ஜக்கசமுத்திரம் ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துமணிஆனந்தன், கணபதி, ராதாமாரியப்பன், முருகன் ஆகியோரின் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்க்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை, மேகர்நிஷா, இளநிலை உதவியாளர்கள் சாலம்மாள், முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வரவு செலவு கணக்குகள் சமர்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து காவிரி உபரி நீரை ஊராட்சிகளில் உள்ள அனைத்து ஏரி, குளங்களுக்கு கொண்டு வருதல், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், தூய்மையான குடிநீர் வழங்குதல், கொசு ஒழிப்பு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்திற்க்கு ஊராட்சி மன்ற செயலாளர்கள் சஞ்சீவன், கோவிந்தன் முருகேசன் , சரவணன் மற்றும் வார்டு உறுப்பிணர்கள் பொதுமக்கள் என திரளானோர் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக