தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட வாரசந்தை செயல்பட்டுவருகிறது. இந்த வார சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையில் கூடும். இந்த வாரச் சந்தையில் நூற்றுக்கணக்கான கடைகள் செயல்படும், பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் பேரூராட்சி அலுவலர்கள் சின்னசாமி, வெங்கடேசன், மகாலிங்கம் ஆகியோர் வாரச்சந்தையில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா?என்பதனை ஆய்வு செய்தனர். மேலும் தடையை மீறி கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர்களை பேரூராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த பத்து கடைகளில் தலா 200 வீதம் ரூபாய் 2 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக