கடத்தூரில் செய்தியாளர் மீது தாக்குதல் நடைபெற்றது இதை கண்டித்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யவும் செய்தியாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் திரு .கவிதா அவர்களிடம் பாப்பிரெட்டிப்பட்டி பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் மனு வழங்கப்பட்டது.
அந்த மனுவில், தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட செய்தியாளர்கள் வட்டார செய்தியாளர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் தொலைக்காட்சி ஊடகம், செய்தித்தாள் ஊடகம், வார இதழ், மாத இதழ் போன்ற பல்வேறு செய்தி ஊடகங்களில் செய்தியாளர்களாக முன் களப்பணியாளர்களாக பெரிய ஊதியம் இன்றி சொற்ப ஊதியத்திற்கு சமூக அர்ப்பணிப்போடு தங்களது பணியை பெரும் சிரமத்திற்கு இடையே செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குறிப்பாக கடந்த 18.10.2024 அன்று அஇஅதிமுக சார்பில் கடத்தூர் பேரூராட்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் மாண்புமிகுமதிப்புக்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.கோவிந்தசாமி அவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின்பு ஆஇஅதிமுகவினருக்குள் கோஷ்டிபூசல் உருவாகி சண்டையிட்டுக் கொண்டனர், இந்த சம்பவத்தை தர்மபுரி மாவட்ட வெளிச்சம் தொலைக்காட்சி செய்தியாளர் சீனிவாசன் அவர்களும், தினகரன் பகுதி நேர செய்தியாளர் உதயக்குமார் அவர்களும் பதிவு செய்து கொண்டிருந்தனர்.
இதைக்கண்ட அதிமுகவை சேர்ந்த தருமன் மற்றும் தீனா ஆகிய இருவரும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்ததோடு செல்போனை பறித்தும் ஆடையை கிழித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர், உடனடியாக காவல்துறையை தலையிட்டு இருவர் பேரிலும் வழக்கு பதிவு செய்துள்ளனர் மிக்க நன்றி, மேலும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டி பத்திரிக்கையாளர் சங்கம் கொண்டு வரும் செய்தி என்னவெனில் தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து முன் களப்பணியாளர்களான செய்தியாளர்களுக்கு செல்போனில் அச்சுறுத்தலும் நேரடியான வன்முறை தாக்குதலும் அதிகரித்து வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக முன் களப்பணியாளர்களான செய்தியாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து வரும் கட்சி தொண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முன் களப்பணியாளர்களான செய்தியாளர்கள் தைரியத்தோடும் அரசின் மீது நம்பிக்கையோடும் செயல்பட நம்பிக்கையூட்டும் வகையில் செய்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுத்து வன்முறையில் ஈடுபடும் செய்தியாளர்களை அச்சுறுத்தும் நபர்கள் மீது கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பாப்பிரெட்டிப்பட்டி பத்திரிக்கையாளர் சங்கம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறது, என குறிப்பிடப்பட்டிருந்தது .
இந்த நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் தலைவர் பேட்ரிக் அந்தோணி, துணைத்தலைவர் சீனிவாசன், பொருளாளர் உதயகுமார், நந்தகுமார், வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக