தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் குடிநீர் தட்டுபாடு மற்றும் கடும் வறட்சி நிலவி வருவதால் ஒகேனக்கலில் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழையால் கர்நாடக பகுதியில் இருந்து உபரிநீர் காவேரியற்றில் சுமார் 2லட்சம் கனஅடிநீர் கரைபுரண்டு ஓடுகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் ஓடும் காவேரியற்றால் எந்த ஒரு பயனுமடையாத தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம் பகுதியில் அணைகள், ஏரிகள் என வறண்டு உள்ளதால் ஆடு, மாடு மேய்க்கு பகுதியாக மாறி உள்ளது. தற்பொது நிலக்கடலை, கரும்பு, வாழை, தக்காளி, தென்னை உள்ளிட்ட பயிர்களும் மானவரியாக பயிரிடப்படும் கம்பு, சோளம், கேல்வரகு, அவரை, துவரை போன்ற பயிர்கள் காய்ந்து உள்ளது.
மாவட்டத்தின் குடிநீருக்காக ஒகேனக்கல்லில் இருந்து ராச்சத மோட்டர்கள் மூலம் பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. இது போன்று காவேரிஉபரிநீரை குழாய் மூலம் மாவட்டத்தில் உள்ள பொதுபணிதுறை 9அணைகள், 944 ஏரிகளுக்கு தண்ணீரை நிறப்பினால் நிலத்தடிநீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுபாடு குறையும், விவசாயம் செழிக்கும்.
தமிழக அரசுக்கு வலியுறுத்தும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரைநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் பாலக்கோடு கடைவீதி, எம்ஜிரோடு, தர்மபுரி, ஓசூர், பெங்களூர் மெயின் ரோடு, இஸ்துபி மைதானம் ஆகிய பகுதிகளில் வணிகர்கள் அனைத்து கடைகளும் கடை அடைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக