உங்க வண்டி காணாமல் போச்சா? அப்போ இந்த லிஸ்டில் உங்க வண்டி இருக்கா? பாத்துக்கோங்க. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 அக்டோபர், 2024

உங்க வண்டி காணாமல் போச்சா? அப்போ இந்த லிஸ்டில் உங்க வண்டி இருக்கா? பாத்துக்கோங்க.




தருமபுரி மாவட்டம், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர்;, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் மற்றும் நல்லம்பள்ளி ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பண்டங்களை லாப நோக்கத்தில் கடத்தி விற்பனை செய்யப்பட்ட கீழ்கண்ட 14 (6-இரண்டு சக்கர வாகனங்கள், 6-நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2-ஆறு சக்கர வாகனங்கள்) வாகனங்கள் கைப்பற்றுகை செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையின்படி (FIR) வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 


இவற்றில் பலவற்றிக்கு சம்மன் அனுப்பப்பட்டு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகாமலும், மேலும், மேற்படி வாகனங்களை உரிமை கோரி உரிய ஆவணங்களுடன் எவரும் முன்வராத காரணத்தினாலும் அரசுக்கு வருவாய் ஈட்டும் பொருட்டு, மின் ஆளுமை மூலம் ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே கீழ்காணும் வாகனங்கள் தங்களுடையது எனக் கருதினால் சம்மந்தப்பட்டவர்கள் வாகன உரிமை தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 தினங்களுக்குள் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிய ஆவணங்களை தாக்கல் செய்து உரிமை கோரலாம் என தெரிவித்து கீழ்கண்டவாறு பட்டியல் வெளியிடப்படுகிறது.

 

வாகனங்களின் பட்டியல் பின்வருமாறு:-

S.No.

Cr.No.

Type of Wheels

Reg. Number.

Type of Vehicle

1

23/2022

2

KA 05 L 4295

TVS XL Super HD

2

69/2022

2

TN 29 BD 4123

TVS XL SUPER HD

3

175/2022

2

TN 29 D _____

TVS  XL

4

53/2023

2

TN 29 BD 8462

TVS XL Super – 100

5

103/2023

2

TN 28 W 9641

TVS 50 XL

6

114/2023

2

TN 29 BP 2733

Praise – Pro  E-Bike

7

133/2021

4

KA 17 B 3385

TATA ACE

8

149/2021

4

TN 54 H 2892

TATA ACE

9

62/2022

4

TN 29 AZ 7913

TATA ACE

10

94/2022

4

TN 29 BP 1830

Ashok Leyland Dost

11

185/2022

4

TN 29 AU 1923

Mahindra Maxim

12

137/2023

4

TN 25 K 8600

TATA ACE

13

57/2020

6

TN 29 BY 8743

Ashok Leyland Lorry

14

58/2022

6

TN 73 E 3181

TATA 1109 Lorry

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad