தொடர் மின் வெட்டால் அவதிப்படும் சுற்றுலா பயணிகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 அக்டோபர், 2024

தொடர் மின் வெட்டால் அவதிப்படும் சுற்றுலா பயணிகள்.


ஒகேனக்கல் பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் செல்போன் டார்ச் லைட்டை பயன்படுத்தி சிகிச்சை பெற்று செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல் சுற்றுலா தளம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தனியார் விடுதிகள் மற்றும் அரசு தங்கும் விடுதிகளில் தங்கி சுற்றுலாத்தலத்தை ரசித்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். இது மட்டுமல்லாமல் ஒரு சில நாட்கள் இரவு முழுவதும் மின்சாரம் தடை ஏற்படும் நிலையும் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். 


இந்த நிலையில் இன்று காலை முதல் தற்போது இரவு ஆகியும் மின்தடையால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மிகவும் அவதிபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும் ஒகேனக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சாரம் இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த  ஒரு சிலநோயாளிகள் செல்போன் டார்ச் லைட்டை பயன்படுத்தி சிகிச்சை பெற்று செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. 


எனவே ஒகேனக்கல் மின்சார அலுவலகத்தில் மின் பணியாளர்கள் இல்லாததால் மின்தடை காலங்களில் மின்சார பழுது நீக்க பணியாளர்கள் இல்லாமல் இது போன்று நாள் முழுதும் மின்தடை ஏற்படும் அவல நிலையும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் வெகு காலமாக ஏற்பட்டு வருகிறது. எனவே ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள மின் அலுவலகத்தில் மின் பணியாளர் நியமிக்க வேண்டும் என்பது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad