தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் (Apparel Training & Design Centre (ATDC)) பாரத பிரதமர் அவர்களின் PMKVY 4.0 முன்னோடி பயிற்சி திட்டத்தின் கீழ் உற்பத்தி மேற்பார்வையாளர் (தையல்) (Production Supervisor (Sewing)) எனும் 720 மணி நேர திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கு குறைந்தபட்சம் கல்லூரி பட்டம் பெற்ற 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் அசல் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவிலான கலர் போட்டோக்களுடன் தருமபுரி குமாரசாமிபேட்டை, பென்னாகரம் சாலை, சந்தோஷ் தியேட்டர் வளாகத்தில் உள்ள பயிற்சி மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுமாறும்.
மேலும் விவரங்களுக்கு Apparel Training & Design Centre (ATDC) பயிற்சி மைய முதல்வர் அவர்களை 04342 266601, 9940830290, 9790034200 எனும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக