பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு நிவாரணம் வேண்டி விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 அக்டோபர், 2024

பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு நிவாரணம் வேண்டி விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு காட்டு யானையால் கொல்லப்பட்ட 3 பேருக்கு  அரசு நிவாரனம் வழங்குதல் மற்றும் காட்டு விலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வட்ட தலைவர் நக்கீரன்  தலைமையில் நடைப்பெற்றது.


இதில் மாநில பொருளாளர் பெருமாள் கலந்து கொண்டு போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பாலக்கோடு வட்டத்தில் உள்ள  32 ஊராட்சிகள் 10 ஊராட்சிகள் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளாகும், இப்பகுதியில் உள்ள விவசாயிகளின்  விளை நிலங்களில் உள்ள பயிர்களை  காட்டு விலங்குகள் நாசம் செய்து வருகின்றன.


மேலும் கடந்த சில மாதங்களில் தீத்தாரப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன், செங்கோடப்பட்டியை சேர்ந்த துரைசாமி, சென்னப்பன் கொட்டாயை சேர்ந்த பழனி ஆகிய மூவரையும் காட்டு யானை கொன்றுள்ளது. வனத்துறையினர் வன விலங்குகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், மேலும் யானையால் கொல்லப்பட்ட மூவருக்கும் தலா 25 இலட்சம் நிவாரணமும், சேதமடைந்த பயிர்களுக்கு 100 சதவீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி மனு கொடுக்கும்போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் அருச்சுணன், மாவட்ட தலைவர் குமார், மாவட்ட துணைத் தலைவர் மல்லையன் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad