தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏமனூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் மேட்டூர் அணைக்காக தங்களது நிலங்களை வழங்கிவிட்டு ஏமனூர், தொன்னைகுட்டஅள்ளி கிராமங்களுக்கு குடி பெயர்ந்து வந்துள்ளனர். மேலும் வேளாண் சாகுபடி நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். கடந்த இரண்டு வருடமாக வனத்துறையினர் இந்த மக்களை விவசாயம் செய்யக்கூடாது என்றும் இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என்றும் கூறி அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
மேலும் அவர்கள் விவசாயம் செய்யும் நிலங்களில் வனத்துறையினர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதனை கண்டித்து நேற்று பென்னாகரம் வனத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்பாட்டத்திற்கு ஏரியூர் ஒன்றிய செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். இதில்விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் மாவட்டத் தலைவர் குமார் மாவட்டத் துணைச் செயலாளர் ஜீவானந்தம் , அன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சிசுபாலன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் ஏரியூர் ஒன்றிய செயலாளர் முருகன் நாகமரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், பென்னாகரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் பென்னாகரம் பகுதி குழு செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இதில் ஏமனூர் தொன்னகுட்ட அள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக