மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலினை -2025 மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் முன்னிலையில் இன்று (29.10.2024) வெளியிட்டார்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் 01.01.2025 நாளை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள்) மற்றும் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பெயர் நீக்கல் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ள ஏதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் - 2025-க்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த தொடர்பான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்
திருத்த பணிகளானது 29.10.2024
முதல் 28.11.2024 வரையில் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 இன்று வெளியிடப்பட்டது. கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு 27.03.2024 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 12,53,021 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன் பின்பான தொடர் திருத்தத்தில் 27.03.2024 முதல் 28.10.2024 வரையில் 14,101 வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டும், 3,382 வாக்காளர்கள் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டும் உள்ளனர்.
இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,38,556 ஆண்கள், 6,25,018 பெண்கள் மற்றும் 166 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,63,740 நபர்கள் வாக்காளர்களாக உள்ளனர். தொகுதி வாரியான வாக்காளர் விவரங்கள்
பின்வருமாறு:
சட்டமன்ற
தொகுதிகள் |
வாக்குச்
சாவடிகளின் எண்ணிக்கை |
வாக்குச்சாவடிமையங்களின்
எண்ணிக்கை |
வரைவு வாக்காளர்
பட்டியல் 2025 -
ன்படி வாக்காளர்களின்
மொத்த விவரம் |
||||
எண் |
பெயர் |
ஆண் |
பெண் |
மூன்றாம்
பாலினத்தவர் |
மொத்தம் |
||
57 |
பாலக்கோடு |
278 |
191 |
122327 |
119902 |
21 |
2,42,250 |
58 |
பென்னாகரம் |
296 |
185 |
128865 |
120982 |
8 |
2,49,855 |
59 |
தருமபுரி |
308 |
163 |
133222 |
130863 |
103 |
2,64,188 |
60 |
பாப்பிரெட்டிப்பட்டி |
314 |
184 |
130337 |
129729 |
15 |
2,60,081 |
61 |
அரூர் |
305 |
184 |
123805 |
123542 |
19 |
2,47,366 |
|
மொத்தம் |
1501 |
907 |
6,38,556 |
6,25,018 |
166 |
12,63,740 |
தருமபுரி மாவட்டத்தில், மொத்தம் உள்ள 1501 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 907 வாக்குச்சாவடி மையங்களில் படிவங்கள் பெறப்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களிடமிருந்து படிவங்களை பெற்றிட வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் (DLO) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். படிவங்களை பெறுவதற்கு ஏதுவாக 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து அனைத்து அரசு வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பப் படிவங்களை நேரில் அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகளை பார்வையிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக திரு. Dr.R..ஆனந்தகுமார், இ.ஆ.ப., (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (பயிற்சி)) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவர்கள் https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்ற கைப்பேசி செயலி (Mobile App) மூலமாகவும் விண்ணப்பங்களை அளிக்கலாம். 17 வயது முடிவடைந்த நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில்
சேர்க்க முன்னதாகவே
(Advance Filling) விண்ணப்பிக்கலாம். எனினும் 01.01.2025 -ஆம் நாள் அன்று 18 வயது பூர்த்தியடைந்த (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்துள்ள) நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு சுருக்க திருத்த
காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மீதமுள்ள விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர்களின் வயது எதிர்வரும்
ஏப்ரல்-1, ஜூலை-1 மற்றும் அக்டோபர் -1 ஆகிய நாட்களில் 18 வயதை பூர்த்தியடையும் பொழுது சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு
அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில்
சேர்க்கப்படும்.
விண்ணப்பங்கள் மீது விசாரணை மேற்கொண்டு முடிவு செய்ய 24.12.2024 அன்று இறுதி நாளாகும். அதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025 அன்று வெளியிடப்படுகிறது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.இரா.க.கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.இரா.காயத்ரி, திரு.இரா.வில்சன் ராஜசேகர், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.அ.அசோக்குமார், அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக