பென்னாகரத்தில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலை கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் மாநில அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 அக்டோபர், 2024

பென்னாகரத்தில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலை கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் மாநில அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.


பென்னாகரத்தில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலை கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் மாநில அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.


கூட்டுறவு வங்கிகளின் கீழ் இயங்கி வரும், நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மூன்று நாட்களாக நியாய விலை கடை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து காலாவதியான பொருட்களுக்கு விற்பனையாளரை பொறுப்பு என்பதை கண்டித்தும், நியாய விலை கடைகளில் இருப்பு குறைவிற்கு இரண்டு மடங்கு அபராதம் என்பதை கண்டித்தும், தேர்வாணையம் மூலம் பணி நியமிக்கப்படும் பணியாளர்களை 100 கிலோமீட்டர் அப்பால் பணி நியமனம் செய்யப்படுவதை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad