தருமபுரி புத்தகத் திருவிழாவினையொட்டி, ”தருமபுரி வாசிக்கிறது” மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு புத்தக வாசிப்பு நிகழ்ச்சியினை தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து நடத்தும் 6-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வருகின்ற 04.10.2024 முதல் 13.10.2024 வரை 10 நாட்கள் மதுராபாய் சுந்தர்ராஜராவ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி ”தருமபுரி வாசிக்கிறது” கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு புத்தக வாசிப்பு நிகழ்ச்சியினை தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.10.2024) தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று நூல்களை வாசித்தனர். வாசிப்புத் திறன் மூலம் பொது அறிவைவளர்த்துகொள்ள பல்வேறு வகையான புத்தகங்களை நாட வேண்டும் என்பதே இந்த நிகழ்வின்நோக்கமாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவ, மாணவியர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி நமது தருமபுரியில் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் பொது நூலகத்துறை, தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து 6-வது புத்தகத் திருவிழா நடத்த உள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவிற்காக தமிழ்நாடு அரசு சுமார் ரூபாய் 20 இலட்சம் நிதியுதவி செய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 6-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நாளை (04.10.2024) முதல் 13.10.2024 வரை 10 நாட்கள் மதுராபாய் சுந்தர்ராஜராவ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தருமபுரி வாசிக்கிறது என்னும் விழிப்புணர்வு வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புத்தகத்தினை வாசித்தனர்.
மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாணவர்கள் பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு பொதுவான தகவல்கள் குறித்து தெரிந்து கொள்வதில்லை. சிறந்த மாணவர்களாக உருவெடுக்க வேண்டும் என்றால் புத்தக வாசிப்பு பழகத்தை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தக வாசிப்பு என்பது ஒரு சுவையான அனுபவம். நமக்கு ஆர்வமுள்ள துறையில் உள்ள புத்தகங்களை தேடி படிக்க வேண்டும். நளைதொடங்க உள்ள தருமபுரி புத்தகத் திருவிழாவில் நீங்கள் வாங்கி படிக்கும் புத்தகம் உங்களுக்குள்ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், இலட்சகணக்கான புத்தகங்கள் குறிப்பாக இலக்கியம், அறிவியல், கலை, வரலாறு, அரசியல், சிறுவர் புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் இடம் பெறுகிறது. மாலைநேரங்களில் நடைபெறும் செவிக்கு விருந்தாகும் சொற்பொழிவுகளில் தமிழகத்தில் மிகச்சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்.
புத்தக வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள், நூல் அறிமுகங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மூத்த குடிமக்கள் என அனைவரும் நமது தருமபுரியில் நடைபெறும் புத்தக திருவிழாவில் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட நூலக அலுவலர் திருமதி.கோகிலவாணி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.லோகநாதன், தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை தலைவர் திரு.இரா.சிசுபாலன், ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக