இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ஜோதி சந்திரா அவர்களின் வழிகாட்டுதலின்படி அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன.
பள்ளி அளவில் ஒவ்வொரு கலைப் பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் தருமபுரி ஒன்றியத்தைச் சார்ந்த 13 குறுவள மையங்களில் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற்ற குறுவளமைய அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டனர். குறுவளமைய அளவில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் 13 கலைப் பிரிவுகளில் முதலிடம் பிடித்த 262 மாணவ மாணவிகள் வட்டார அளவில் 25.10.2024 அன்று கோட்டை உருது நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளை வளமைய மேற்பார்வையாளர் திரு. முல்லைவேந்தன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு. ஜீவா, திரு. நாசர் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
- பேச்சுப் போட்டியில் விருப்பாச்சிபுரம் தொடக்கப்பள்ளி மாணவி பிரித்திகா,
- திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் ஆட்டுக்காரன்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவி பூர்வ சன்மதி
- மெல்லிசை பாடல் போட்டியில் குப்பூர் நடுநிலைப்பள்ளி மாணவி மது ஸ்ரீ,
- தேசபக்தி பாடல்கள் போட்டியில் செக்காரப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவர் யுவ பிரசாந்த்
- களிமண் பொம்மைகள் போட்டியில் சித்தன் கொட்டாய் தொடக்கப்பள்ளி மாணவர் அஜய்
- மாறுவேடப் போட்டியில் (3-5 வகுப்பு) சித்தன் கொட்டாய் தொடக்கப்பள்ளி மாணவர் பிரவீன்
- நாட்டுப்புற குழு நடனம் போட்டியில் நாயக்கன் தொடக்கப்பள்ளியின் பிரக்யா குழு மாணவ மாணவிகள் மற்றும்
- பரதநாட்டியம் குழு போட்டியில் மூக்கனஅள்ளி தொடக்கப் பள்ளியில் நாட்டிய நங்கைகள் குழு
- மழலையர் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் பெரியகுளம் பட்டி நடுநிலைப்பள்ளி மாணவி தேஜஸ்வினி
- கதை கூறுதல் போட்டியில் பெரிய குரும்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவி தேஜஸ்வினி
- வண்ணம் தீட்டுதல் போட்டியில் சிக்கம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவி கோபிகா
- ஆங்கில பாடல் ரைம்ஸ் போட்டியில் செல்லம் கொட்டாய் தொடக்கப்பள்ளி மாணவி கவிநிலா
- மாறுவேடப் போட்டியில் (1&2வகுப்பு) சித்தன் கொட்டாய் தொடக்கப்பள்ளி மாணவி ரோஷினி ஆகியோர் வட்டார அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இப்போட்டிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிகளுக்கான செய்திருந்தனர். எமிஸ் இணையதள நிர்வாகிகள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். முன்னதாக தருமபுரி மாவட்டத் திட்ட அலுவலர் இரவிக்குமார் கலைத் திருவிழா போட்டிகளை பார்வையிட்டு மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக