தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பில் 12 வாக்குச்சாவடிகள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது - முழு விவரம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 அக்டோபர், 2024

தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பில் 12 வாக்குச்சாவடிகள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது - முழு விவரம்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, சிறப்பு சுருக்கத் திருத்தம் - 2025 தொடர்பாக தருமபுரி மாவட்டத்தில் இருந்த 1489- வாக்குச்சாடிகளில் புதிய பாகங்கள் அமைத்தல், பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல், வாக்குச் சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச் சாவடியை வேறு கட்டடத்திற்கு மாறுதல் செய்தல் மற்றும் வாக்குச் சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்ற வாக்குச்சாவடி மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இவைகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையமானது, அனுப்பப்பட்ட முன்மொழிவுகளில் கீழே பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச்சாவடி மறுசீரமைப்பு மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதுஅதன்படி, தருமபுரி மாவட்டத்தில் மறுசீரமைப்புக்கு முன்பு 1489 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்பொழுது 12 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டதால் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையானது 1501-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் குறித்த விவரங்களின்  தொகுப்பு பின்வருமாறு:-


வாக்குச்சாவடி மறுசீரமைப்பு - 2025

. எண்

சட்டமன்றத் தொகுதி

புதிய பாகங்கள் உருவாக்குதல் (எண்ணிக்கை)

பகுதிகளை மறு சீரமைப்பு செய்தல் (எண்ணிக்கை)

கட்டடம் / இட மாற்றம் (எண்ணிக்கை)

வாக்கு சாவடியின் பெயர் மாற்றம் (எண்ணிக்கை)

வாக்குச்சாவடி  மறுசீரமைப்பிற்கு பின்பு தற்போது வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை

1

பாலக்கோடு

6

6

4

0

278

2

பென்னாகரம்

2

0

2

0

296

3

தருமபுரி

0

 2

5

1

308

4

பாப்பிரெட்டிப்பட்டி

0

0

1

0

314

5

அரூர்

4

0

2

0

305

மொத்தம்

12

8

14

1

1501

இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.                                                                                                                  

  

கருத்துகள் இல்லை:

Post Top Ad