பாலக்கோட்டில் பட்டாசு கடைகளால் ஏற்படும் விபத்தை தடுக்க ஒதுக்குபுறம் பட்டாசு கடை அமைக்க தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 அக்டோபர், 2024

பாலக்கோட்டில் பட்டாசு கடைகளால் ஏற்படும் விபத்தை தடுக்க ஒதுக்குபுறம் பட்டாசு கடை அமைக்க தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் சுமார்  30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பாலக்கோட்டை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. திருவிழா, பண்டிகை காலங்களில் பாலக்கோட்டில் உள்ள கடைகளில் துணிமணிகள், மளிகை பொருட்கள் பட்டாசுக்கள் வாங்க இலட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.


இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தீபாவாளியை முன்னிட்டு பாலக்கோடு கடைத்தெருவில் பட்டாசுக்கடை வைக்க 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பலவித கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வந்தாலும், அனைவரையும் சரிகட்டி நிபந்தனைகளை மீறி தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசுக்கடை அமைக்கப்பட்டு வருவது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.


சமீப காலங்களில் பட்டாசுக் கடைகளில் ஏற்படும் திடிர் தீ விபத்தால் உயிர் சேதம் ஏற்பட்டு வரும் நிலையில், இதனை தவிர்க்க சென்ற ஆண்டு டி.எஸ்.பி. தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகரத்தின் மையப்பகுதி, பஸ் நிலையம் அருகில், பொதுமக்கள் அதிகம் நடமாடும் கடைத் தெருக்களில் பட்டாசு கடை அமைக்க கூடாது என்றும், அண்டை மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மற்றும்  கிருஷ்ணகிரி  நகரின் ஒதுக்குபுறமாக பட்டாசு கடைகள் அமைத்துள்ளது போல் பாலக்கோடு பைபாஸ் சாலை, பாதுகாப்பான  பகுதிகளில் கடைகளை அமைக்க கூறினார்.


தற்போது கடை வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டதாகவும், இனிவரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அனுமதிக்கப்படும் இடங்களில் பட்டாசு கடை வைப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் மீண்டும் இம்முறை பாலக்கோடு பேருந்து நிலையம், கடைத்தெரு உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கடை வைக்க விண்ணப்பித்துள்ளதாகவும் இதனை மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசு  கண்காணித்து விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு  பட்டாசு தீ விபத்தினால் ஏற்படும் உயிர் பலியை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad