மாதேஅள்ளியில் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாவட்ட பேரவைக்கூட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தி தீர்மானம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

மாதேஅள்ளியில் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாவட்ட பேரவைக்கூட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தி தீர்மானம்.


தருமபுரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாவட்ட  பேரவைக் கூட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி காளியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் முருகசாமி, கௌரவதலைவர் சிங்கார வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மாவட்ட துணை செயலாளர் சாரதி வரவேற்றுப் பேசினார். மாநில துணைத் தலைவர் டி.ஆர்.சின்னசாமி, மாநில பொறுப்பாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு  பேசினர். இக்கூட்டத்தில் தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழக அரசு  இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்க அரசு வழங்கும் உதவித்தொகையை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்திட வேண்டும், அரசு விழாக்கள் மற்றும் திட்ட விளக்க பிரசார நிகழ்வுகளில் தெருக்கூத்து கலைஞர்களை ஈடுபடுத்தி வருவாய் அளித்திட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முனியப்பன் உள்ளிட்ட நாடக மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் மாவட்ட துணைத் தலைவர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad