தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் ஆலமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு செயலாளர் தலைமை ஆசிரியர் பாரதி தலைமை தாங்கினார்.ஆசிரியர் பிரதிநிதி ஆசிரியை உமாராணி வரவேற்று பேசினார். SMC குழு தலைவர் விஜியா முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சபரிநாதன் சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப கூடுதலாக வகுப்பறைகளை கட்டித் தர வேண்டும் எனவும் கூடுதலான கழிவறைகள் கட்டித் தர வேண்டும் எனவும், பள்ளியின் நுழைவு வாயிலுக்கு முன்பாக நெடுஞ்சாலை உள்ளதால் சுற்று சுவர் கட்டித்தர வேண்டும் எனவும் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த வேண்டுமெனவும் மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் போதை பொருள் இல்லாத ஊர்,பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்தும் குழுக்கள் அமைக்கலாம் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றி கூறினார். இறுதியில் சிவசுப்பிரமணியம் ஆசிரியர் நன்றி கூறினார். இதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக