சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- விபத்துறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை
- இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை
- ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை
- கல்வி உதவித்தொகை
- திருமண உதவித்தொகை
- மகப்பேறு உதவித்தொகை
- மூக்கு கண்ணாடி செலவுத்தொகை ஈடுசெய்தல்
- முதியோர் ஓய்வூதியம்
மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சீர்மரபினர் வாரியத்தில் புதியதாக உறுப்பினர் பதிவு செய்துக் கொள்ளவும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக வருகின்ற 28.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக