பாலக்கோடு‌ மாரியம்மன் கோயில் தெருவில் பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக குட்கா விற்றவர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 அக்டோபர், 2024

பாலக்கோடு‌ மாரியம்மன் கோயில் தெருவில் பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக குட்கா விற்றவர் கைது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மாரியம்மன் கோயில் தெருவில் ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து பாலக்கோடு போலீசார் மாரியம்மன் கோயில் தெருவில்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள பழனி (வயது.50)  என்பவர் தனது பெட்டி கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் பெட்டி கடையில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், தூலிப், உள்ளிட்ட 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள  குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, இது குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad